உலகம் வியக்கும் மனிதகுலத்தின் வரலாறு என்கிற வரலாற்று அறிவியல் நூலை எழுதியவர் யுவால் நோவா ஹராரி.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர் ஹராரி. இஸ்ரேலியர். ஜெருசலம் எபிரேய பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக இவர் உள்ளார். உலக வரலாறு குறித்து இவர் சிறப்பான ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். வரலாற்றுக்கும் உயரியலுக்கும் இடையேயான உறவு, வரலாற்றில் உள்ள நியாயம், வரலாறு மாந்தர்களை மகிழ்விக்கிறதா? உள்ளிட்ட தலைப்புகளில் அவரின் ஆய்வுகள் உள்ளன.
இவர் எழுதிய மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு என்ற தலைப்புக்கான இணையவழிப் பயிற்சியில் 65000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட சாதனை நிகழந்துள்ளது. உலகளில் 30 மொழிகளில் இப்புத்தகம் விற்பனையாகியுள்ளது. பொலோன்ஸ்கி விருதை இதற்காக ஹராரி பெற்றுள்ளார்.
பெருவெடிப்புக் கோட்பாடு அடிப்படையில் உலகம் தோன்றியது முதல் எதிர்காலத்தில் பூமிக்கான மனிதர்களால் நிகழவுள்ள அழிவுகள் குறித்து இவர் நூல்கள் பேசுகின்றன. இவர் எழுதியுள்ள மனிதகுலத்தின் நாளைய வரலாறு என்ற நூல் தற்கால மனிதவாழ்வியலில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஊட்டுகிறது.
“நம்முடைய நம்பிக்கைகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் நம் உலகைப் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளைக் கற்பனைகறைப் பற்றிக் கேள்வி எழுப்பவும், கடந்தகால வளர்ச்சிகளை நிகழ்கால சிக்கல்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கவும், விவாதத்துக்குரிய விவகாரங்களைக் கண்டு அச்சப்படாமல் இருக்கவும் அனைவரையும் நான் ஊக்கப்படுத்துகிறேன்.” என்பதுதான் ஹராரின் அனைவருக்குமான அறிவுரை.
அவருடைய புத்தகங்களைப் படித்துத் தெளிவுகொள்வோம்.
Exellent!
சிறப்பு