சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சூரியும் அன்னாபென்னும் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.
உலகத்திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்ற கூழாங்கல் பட இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆணாதிக்கம், ஜாதிமனநிலை ஆகியவற்றிற்கு எதிராகவும் இக்கதை பேசுகிறது.
வணிகத்தை மட்டுமே நம்பியிருக்கிற திரைப்படங்கள் மத்தியில் நல்லதைப் பேச வேண்டும் என்று விரும்பி சிவகார்த்திகேயன் படத்தைத் தயாரிதுள்ளார்.
நகைச்சுவை நடிகராகவும், சண்டைக்கதாநாயகனாகவும் வலம் வரும் சூரி இந்தப்படத்தில் மற்றொரு மாறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார்