கென்யாவில் பலலட்சம் இந்திய காகங்களைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாவுக்கு வரும் பயணிகளைச் சாப்பிடவிடாமல் இடையூறு செய்தல், மரத்தடிகளில் உட்காருபவர்களின் தலைகளில் எச்சமிடுதல் போன்ற காரணங்களால் காகங்கள் மட்டும் காகங்கள் கொல்லப்படவில்லை என்றும், கென்யாவின் இயற்கைக்காரணிகளை அழிக்கும் வகையில் காக்கையினங்கள் இருப்பதாக அந்த நாட்டு வனத்துறை தெரிவித்துள்ளது.
காடுகளில் வாழும் உயிரினங்களைக் கொல்வதாகவும், உள்நாட்டுப் பறவைகளின் குஞ்சுகள், முட்டைகள், கூடுகளை அழிப்பதாகவும் வனத்துறை குற்றஞ்சாட்டுகிறது.
மேலும் உள்நாட்டுப் பறவைகள் காகங்கள் அழிக்கப்படுவதால் கென்யா நிலங்களில் வாழும் சிற்றுயிர்களின் எண்ணிக்கை பெருகி உணவுச்சங்கிலி பாதிக்கப்படுவதாகவும் கென்ய வனத்துறை தெரிவிக்கிறது.
காங்களை அழிக்கக் கல்களால் அடிப்பதும், வில்வண்டுகளால் தாக்குவதும் மட்டும் போதவில்லை. எனவே நஞ்சு கொடுத்துக் கொல்ல முன்வந்திருப்பதாக கென்யா தெரிவிக்கிறது.
தொடக்கக்காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள அகற்றவே இந்தியக் காகங்கள் கொண்டு வரப்பட்டன எனச் சொல்லப்பட்டாலும், கப்பல்களில் தொத்திக்கொண்டு இந்திய காகங்கள் கென்யா வந்தததாகவும் தெரிவிக்கின்றனர்.
காகங்களைக் கொல்ல வெளிநாடுகலிருந்து நஞ்சு வரவழைக்கப்பட்டுப் பத்து லட்சம் இந்திய காகங்களைக் கொல்லக் கென்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காகம் எந்தக் கடவுளுக்கும் அடையாளமாக இல்லாததால் எந்தக் கடவுள் நம்பிக்கை ஆட்சியாளர்களும் இந்தியக் காகங்களைக் காப்பாற்ற முன்வர மாட்டார்கள் என்றே தெரிகிறது.