சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நாசாவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் ஆகியோர் அனுப்பப்பட்டனர்.
தனியார் நிறுவனமான போயிங் விமான நிறுவனம் தயாரித்த புதிய விண்கலமான ஸ்டார்லைனரைப் பரிசோதிக்க இருவரும் இந்த ஆண்டு ஜுன் 5ந்தேதி அனுப்பப்பட்டனர். எட்டே நாள்களில் திரும்ப வேண்டிய இருவரும் இன்னும் திரும்புவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கின்றனர்.
இருவரு சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதா? அல்லது ஹீலியம் குறைபாடா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விண்கலம் புறப்படுவதற்கு முன்பே விண்கலத்தில் ஹீலியம் கசிவு பிரச்சினை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிறியளவிலான பிரச்சினை என்று சொல்லி விண்கலம் புறப்பட்டது. இந்த ஹீலியம் தான் த்ரஸ்டர் என்ற எந்திரத்தை இயக்கப்பயன்படும் வாயு ஆகும். த்ரஸ்டர் என்பது விண்கலனை வான்வெளியில் இயக்குவதற்கும் வளிமண்டலத்தில் விண்கலனின் வேகத்தைக் குறைத்துப் பூமியில் இறங்குவதற்கும் பயன்படக் கூடியது. இந்த நிலையில் ஹீலியம் கசிவு இருந்தும் இந்த விண்கலனை அனுப்பியதால் தனியார் நிறுவனமான போயிங் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியுள்ளது.
ஆனால் தனியார் நிறுவனங்களை நம்பி நாசா செயல்படுவதை விமர்சனம் செய்யும் சூழலும் உருவாகியுள்ளது.