ஷார்க் பிக்சர்ஸ் தயாரிப்பில் மைக்கேல் கே ராஜா இயக்கியுள்ளார்.
மனிதநேயம் காணாமல்போயுள்ள இக்காலத்தில் மனிதநேயத்தை அன்புறுத்துகிற திரைப்படங்கள் வரிசையில் போகுமிடம் வெகுதூரமில்லையும் இடம்பெறுகிறது.
மார்ச்சுவரி வேன் ட்ரைவர், அவரின் கர்ப்பிணி மனைவி, தெருக்கூத்துக் கலைஞர், இரண்டு மனைவிகளின் பிள்ளைகள், காதல் ஜோடி என முதன்மைக் கதைமாந்தர்களை வைத்துக் கொண்டு மனிதநேயத் திரைக்கதையைச் சிறப்பாக வைத்துள்ளார் இயக்குநர்.
அனைவரும் பார்க்க வேண்டிய மனிதநேயத் திரைப்படம்.