பார்மர்ஸ் மாஸ்டர் பிளான், நவ்வி ஸ்டுடியோஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் வாழை
பொன்வேல், கலையரசன், ராகுல், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.
மாரிசெல்வராஜ் தன்னுடைய 13 வயதில் நிகழ்ந்தவவைகளைத் திரைப்படமாக்கியுள்ளார். இதை ஆவணப்படமாக இல்லாமல் மக்கள் விரும்பும் ஜனரஞ்சகப் படமாக்கியதில் வெற்றிபெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளத்தில் நடப்பதாகக் கதைக்களம் அமைந்துள்ளது. வாழைத் தோப்புகளிலிருந்து வாழைத்தார்களைச் சுமந்து வந்து லாரிகளில் ஏற்றும் கூலித்தொழில் தான் கருங்குளம் மக்களின் வாழ்க்கையாக உள்ளது.
விடுமுறை நாள்களில் வாழைத்தார் கூலியாக சிறுவன் சிறப்பாக நடித்துள்ளான். ஆசிரியை மீதான பாசம், தாய் பாசம், சுதந்திரச் சிந்தனை இவைகளைப் பண்புகளாகக் கொண்ட சிறுவனின் வாழ்வில் எதிர்பாராமல் நிகழும் சம்பவமே கதையை அடுத்தகட்டத்திற்கு நடத்துகிறது.
அனைவரின் சிறப்பான நடிப்பாலும் படம் மிளிர்கிறது. அனைவரும் பார்க்க வேண்டிய படம்