புத்தரின் கோட்பாடுகளைப் போற்றுவதற்கான பன்னாட்டு அபிதம்மம் திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இந்திய பிரதமர் பேசியதாவது,
பழம்பெருமை மிகுந்த பாலிமொழிக்குச் செம்மொழி தகுதியை இந்திய அரசு வழங்கியுள்ளது. இதனால் புத்தரின் சிறப்பான மரபுகளை உலகுக்கு எடுத்துக்காட்டப்படும். இந்திய விடுதலைக்குப் பிறகு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி நம் நாட்டின் பண்பாட்டு மரபுகளைப் போற்றாமல் புறக்கணிப்புச் செய்ததை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இன்றைய புவிசார் அரசியல் சூழலில் புத்தரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய டங்கள் நிறைய உள்ளன. அதன்படி போரை விலக்கி வைத்து அமைதிக்கான பாதையை உருவாக்குவதில் அனைத்து நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும்.
அனைத்துநாடுகளும் அதன் மரபுகளை அவற்றின் அடையாளங்களுடன் தொடர்புபடுத்திப் பெருமைகொள்ளும்போது இந்தியா அதில் மிகவும் பின்தங்கியது. இதற்குச் சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தவர்கள் நமது அடையாளங்களை அழிக்க முயன்றதே காரணமாகும். அதன்பின்னர் இருந்த ஆட்சியாளர்கள் அடிமை மனப்பான்மையால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தததால் அதை வழிமுறையைக் கடைப்பிடித்து வந்தனர். இப்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.
நாடு இப்போது தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டுச் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கயுடன் வளர்ந்து வருகிறது. இந்த மாற்றத்தால்தான் துணிச்சலான முடிவுகளை நாம் எடுக்கிறோம். அதன் ஒரு பகுதிதான் பாலிக்குச் செம்மொழி தகுதி வழங்கப்பட்டுள்ளது. எனது அரசின் கொள்கைகள், திட்டங்கள் புத்தபெருமானின் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுகிறது. அதேபோன்று, உறுதியற்ற மற்றும் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ள உலகம் அதன் சிக்கல்களுக்குப் புத்தரின் கோட்பாடுகளிலிருநது தீர்வுகளைப் பெற முடியும்.
புத்தரின் கூற்றுப்படி சண்டை மற்றும் கருத்துவேறுபாடுகள் பேரமைதிக்கு வழி செய்கிறது.
அன்பு, அமைதியைவிட பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை என்பதை இவ்வுலகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் பேசினார்.