• எங்களைப் பற்றி
  • தனியுரிமைக் கொள்கை
  • தொடர்புக்கு
  • விளம்பரம்
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 28, 2026
தினவானம்
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • திரைவானம்
  • மருத்துவம்
  • மேலும்
    • உண்மை சரிபார்ப்பு
    • கருத்து
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • திரைவானம்
  • மருத்துவம்
  • மேலும்
    • உண்மை சரிபார்ப்பு
    • கருத்து
No Result
View All Result
தினவானம்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • திரைவானம்
  • மருத்துவம்
  • மேலும்
Home அரசியல்

நீட் போராட்டம் தில்லியில் வலுக்கிறது

ஜூலை 24, 2026
in அரசியல், முதன்மைச் செய்திகள்

புது தில்லி, நீட் தேர்வு முறைகேடுகளுக்குக் காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும், நீட் தேர்வை உடனடியாக விலக்கு செய்திட வேண்டும் எனவும், நீட் தேர்வு மன உளைச்சலாம் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கரப்பான் பூச்சி என்கிற அமைப்பு தில்லி, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டது. இதில் நீட் எதிர்ப்புச் சிந்தனையுள்ள இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜுலை 20 அன்று நடந்த மாணவர் போராட்டத்தின்போது, தில்லி அரசு மாணவர்களை முடக்கும் நோக்கத்தில் மெட்ரோ ரெயில் சேவை, இணைய சேவைகளை முடக்கியது. இவற்றைப் பொருட்படுத்தாமல் மாணவர்கள் ஜந்தர் மந்தரில் குவியத் தொடங்கினர்.
மாணவர்களைத் தடுக்க காவல்துறையினர் பெரிய பெரிய தடுப்புகளை அமைத்தும், மாணவர்களின் கூடுதலைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. கரப்பான் பூச்சி அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே டெம்போ ஒன்றில் வந்தபோது, காவல்துறையினர் அவரைக் கீழே இறங்க வற்புறுத்தியுள்ளனர். அவரின் பாதுகாப்பு கருதி மாணவர்கள் அவரைக் கீழே இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இணையம் துண்டிக்கப்பட்ட நிலையில், ஜந்தர் மந்தரில் நிகழ்ந்தவைகளை மறைக்கக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
கண்ணீர் புகைக் குண்டுகளைக் காவல் துறையின் வீசியுள்ளனர். சாதாரண உடையில் இருந்தவர்களும் மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். காவல்துறையினரால் பெண்களும் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்ஜித் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துள்ளார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆடைகள் கிழிக்கப்பட்ட மாணவர்கள், கைகளிலும், கால்களிலும், தலையிலும் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
நீட்டுக்கு எதிரான போராட்டம் மாணவர்களாலும் இளைஞர்களாலும் தொடர்ந்து நடத்த முடியுமா? மக்கள் ஆதரவு தருவார்களா, உயிர்விடும் வரை பட்டினிப் போராட்டம் நடத்தும் சமூக நற்பணியாளர் சோனம் வாங்சுக் தியாகத்திற்கு மரியாதை கிடைக்குமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறுகிறபோது, ஏறத்தாழ ஆண்டுக்கு ரூ.1லட்சத்து 34 ஆயிரம் கோடி நீட் தேர்வு தயாரிப்பிற்காக பெற்றோர் செலவிடுவதாகக் கூறியுள்ளார். 152 முறை நீட் வினாத்தாள் கசிவு நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இவற்றைப் பார்க்கும்போது, ஒன்றிய அரசு நீட் தேர்வு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், எப்படியும் மாணவர்கள் போராட்டத்தை அடக்கி விட முடியும் என்கிற முடிவிலேயே மோடி அரசு தொடர்வதாகத் தெரிகிறது.

Tags: கரப்பான் பூச்சி அமைப்புநீட் எதிர்ப்புபோராட்டம்ஜந்தர் மந்தர்
ShareTweetSendShare

தொடர்புடைய செய்திகள்

திரைவானம்

ஜனநாயகன் திரைப்படம்

ஜூலை 25, 2026
0

...

மேலும் படிக்க Details
அரசியல்

இந்தியத் திறன் போட்டிகள் 2027

ஜூலை 24, 2026
0

...

மேலும் படிக்க Details
தினவானம்

தினவானம்

தமிழ் செய்தி இணையம்

செய்திப் பிரிவுகள்

  • அண்மைச் செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • கால்பந்து
  • த
  • தமிழ்நாடு
  • திரைவானம்
  • மருத்துவம்
  • முதன்மைச் செய்திகள்
  • விளையாட்டு

விரைவு இணைப்புகள்

  • எங்களைப் பற்றி
  • தனியுரிமைக் கொள்கை
  • தொடர்புக்கு
  • விளம்பரம்

எங்களுடன் இணைந்திருங்கள்

  • எங்களைப் பற்றி
  • தனியுரிமைக் கொள்கை
  • தொடர்புக்கு
  • விளம்பரம்

© 2026 தின வானம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • திரைவானம்
  • மருத்துவம்
  • மேலும்
    • உண்மை சரிபார்ப்பு
    • கருத்து

© 2026 தின வானம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.