தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, லட்சிய ஜனநாயகக் கட்சி, அதிமுக ஆகியன தங்களுக்குள் தொகுதி உடன்பாட்டை முடித்துக் கொண்டன. இதன்படி என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், லஜக 2 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி முடியும் வரை கூட, கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை.
எனவே, காங்கிரஸ், திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியன விருப்பம்போல் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில் இந்திய கூட்டணிக்குள் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு 26ந்தேதிக்குள் கூட்டணி வேட்பாளர்கள், தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற வேண்டும்.
ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் திடீரென மனம்மாறி, கட்சி தொகுதி உடன்பாடுகளை மீறினால், இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதியாகிவிடும்.








