சென்னை, பல்லாவரம், அனகாபுத்தூரில் தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் மார்ச் 22ந்தேதி வாகனங்களை நிறுத்திச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஒரு வாகனத்தை நிறுத்திப் பரிசோதித்தபோது, 13 தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் வாகனத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 16 கோடி 63 லட்சம் எனக் கூறப்படுகிறது.
நகைக்கடைகளுக்கு இந்த ஆபணரங்களைக் கொண்டு செல்லும்போது தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் பிடித்துள்ளதாக வாகனத்தில் உள்ளோர் கூறியுள்ளனர். ஆனால், எவ்விதமான ஆவணங்களும் இல்லாமல் இவ்வளவு நகைகளைக் கொண்டு செல்வது, தேர்தல் இல்லாத சூழலிலும் வாய்ப்பு இல்லை என்று சொல்கிறது.
எனவே அத்தனை நகைகளையும் பறிமுதல் செய்து, வருமானத்துறையிடம் தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் ஒப்படைத்துள்ளனர்.
வணிகம் மற்றும் திருமணத்திற்காகக் கொண்டு செல்லப்படும் நகைகள் யாவும் தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்படுவதாகவும், அரசிய்லவாதிகள் யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஆனால், தேர்தல் ஆணையம் ஓட்டுக்குப் பணம் என்கிற தேர்தல் முந்தைய நாள் அவலத்தைத் தடுத்து நிறுத்துமா என்று பார்ப்போம்.








